வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2026 (14:05 IST)

இவ்ளோதான் கொடுக்க முடியும்!. முக ஸ்டாலின் கறார்!.. இனி ராகுல் காந்தி கையில்!...

rahul stalin
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னமும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. ஏனெனில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கொடுப்பதாக சொன்னது திமுக.

ஆனால் காங்கிரஸ் 39 சட்டமன்ற தொகுதிளையும் 2 ராஜ்ய சபா தொகுதிகளையும் கேட்டது. ஆனால் அதையும் திமுக ஏற்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் 1 மணியளவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரசுக்கு 36 தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் அதற்கு கீழ் குறைக்க முடியாது என சிதம்பரத்திடம் ராகுல் சொன்னதாக சொல்லப்படுகிறது

ஆனால், ஸ்டாலின் அதை ஏற்கவில்லை. அதேநேரம், ஸ்டாலின் இறங்கிவந்து 29 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி என சொன்னதாக தெரிகிறது. எனவே, நாம் கொஞ்சம் இறங்கி வருவோம் என ராகுல் காந்தியிடம் சிதம்ப்ரம் சொன்னதாக தெரிகிறது. 25 தொகுதியிலிருந்து 29 தொகுதிகளுக்கு திமுக ஏறி வந்திருக்கிறது. 39 தொகுதிகளிலிருந்து காங்கிரஸ் இறங்கி வந்து 36 கேட்கிறது.

ஆனால், காங்கிரஸுக்கு 29 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா என்பதே இறுதி முடிவு என முக ஸ்டாலின் சொல்லிவிட்ட நிலையில் இன்று மாலைக்குள் ராகுல் காந்தி தனது முடிவை திமுகவிடம் தெரிவிப்பார் என சொல்லப்படுகிறது. இருதரப்பும் கூட்டணியை விரும்புவதால் சமூக முடிவு எட்டப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.