திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (00:17 IST)

சேலத்தில் 2 டன் ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

சேலத்தில் 2 டன் ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று அதிகாலை அப்பகுதியில்  குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்துல் சுமார் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.