1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sarathkumar statement for Chief minister mother passes

ஈடு செய்ய முடியாத இழப்பு: முதல்வர் தாயாரின் மறைவு சரத்குமார் இரங்கல் அறிக்கை

சரத்குமார்
முதல்வர் தாயாரின் மறைவு சரத்குமார் இரங்கல் அறிக்கை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்
 
ஏற்கனவே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்பட பலர் முதல்வரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் உடல் நலக் குறைவினால் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது 
 
அன்பான தாயை பிரிந்து வாடும் முதலமைச்சரின் வேதனையை உணர முடிகிறது. தாயின் மறைவு முதல்வருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.
 
அடுத்த கட்டுரையில்
ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: என்ன காரணம்?