புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:06 IST)

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: என்ன காரணம்?

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்
கடந்த சில மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள 200 நாடுகளில் கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 3.8 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸிலிருந்து பொது மக்களை காப்பாற்ற உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் உள்ளன. ரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்ததோடு அதன் பரிசோதனைகளையும் தொடங்கிவிட்டது
 
இந்த நிலையில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடிக்க கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறது. மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒரு சில தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரனோ தடுப்பூசியின் ஆய்வக பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்த தன்னார்வ ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இந்த தடுப்பூசியை தீவிர ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரனோ தடுப்பூசி பரிசோதனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது