மீண்டும் போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்!. இதுக்கு இல்லையே சார் ஒரு எண்டு!...
பணி நிரந்தரம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாகவே தூய்மை சென்னை மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அம்பத்தூர் 5 மற்றும் 6வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கல்.
ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தூய்மைப் பள்ளியர்கள் நடத்தினார்கள். மேலும், சென்னை பாரிமுனையில் இருந்து ஜார்ஜ் கோட்டை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்ற போது போலீசார் அவர்களை கைது செய்தார்கள்.
இந்நிலையில் திமுகவின் அலுவலகமாக செயல்பட்டு வரும் அண்ணா அறிவாலயம் முன்பு தூய்மை பணியாளர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தினார்கள். தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு தரப்பினர் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.