1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: திங்கள், 29 டிசம்பர் 2025 (12:51 IST)

பொண்ணுக்கு ஆசைப்பட்டு புண்ணுதான் கிடைச்சது!.. பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்....

man
எப்போது இணையதளமும், ஸ்மார்ட்போனும் எல்லோரின் கையிலும் வந்ததோ அப்போது ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துவிட்டது. இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.. உங்களின் டெபிட் கார்டு 16 டிஜிட் நம்பரை சொல்லுங்கள்.. ஓடிபி சொல்லுங்கள்.. இந்த ரிசார்டுக்கு ஸ்டார் கொடுங்கள் என்றெல்லாம் சொல்லி ஆசை வார்த்தைகளை தூண்டி ஆன்லைனில் பலரும் மோசடி செய்கிறார்கள். கஷ்டத்தில் இருப்பவர்கள் உடனடியாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் தங்கள் பணங்களை இழந்து வருகிறார்கள். ஆன்லைனில் புதுப்புது விஷயங்களை கண்டுபிடித்து பலரும் மோசடி செய்து வருகிறார்கள்.

அப்படித்தான் சென்னையை சேர்ந்த ஒரு வாலிபர் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்து இருக்கிறார். இவர் வட மாநிலத்தை சேர்ந்த்வர். பணம் அனுப்பினால் அழகிய பெண்களை உல்லாசத்திற்காக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று ஒரு முகநூல் ஐடியில் ஒருவர் சொன்னதை நம்பி அந்த வாலிபர் 28 ஆயிரம் ரூபாய் GPay மூலம் செலுத்தியிருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் அப்படி யாரும் வராததால் அதுபற்றி கேட்டதற்கு பொட்டாசியம் பெர்மாங்கனேட் வாங்கி அதோடு சர்க்கரையை கலந்து கையில் தேய்த்தால் உடனே பெண் வருவார்’ என சொல்ல அதையும் நம்பி அப்படியே செய்திருக்கிறார் அந்த வாலிபர். அப்படி செய்ததில் கை முழுவதும் கொப்பளங்கள் வரவே தன் ஏமாற்றப்பட்டது அவருக்கு புரிந்திருக்கிறது.இதையடுத்து சைபர் கிராம் காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

பொண்ணுக்கு ஆசைப்பட்டு புண்ணு வந்த கதையாகிவிட்டது அந்த வாலிபருக்கு!...