செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (22:22 IST)

சேலம் கலெக்டர் ரோஹினி திடீர் இடமாற்றம்!

சேலம் மாவட்டத்தையே கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக்கி கொண்டு வந்த கலெக்டர் ரோஹினி இன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடமாற்ற உத்தரவை தலைமைச்செயலாலர் கிரிஜா வைத்தியநாதன் சற்றுமுன் பிறப்பித்துள்ளார். சேலம் கலெக்டர் ரோஹினி மட்டுமின்றி சென்னை, மதுரை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
 
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசைக்கல்லூரி பதிவாளராகவும், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அதேபோல் இசைப் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சீதாலட்சுமி சென்னை ஆட்சியராகவும், மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக இருந்த டி.எஸ்.ராஜசேகர், மதுரை மாவட்ட ஆட்சியராகவும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஏ.ராமன், சேலம் ஆட்சியராகவும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.