பேஸ்புக் காதல் விவகாரம் : மாப்பிள்ளையை கொல்ல முயன்ற மாணவி!

crime
Last Updated: புதன், 29 மே 2019 (15:29 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரில் வசித்து வருபவர்  சரவணன் (27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.அண்மையில் இவருக்கும், இவரது உறவுக்கார பெண்ணான் ஜான்சிக்கும்(19) பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஜான்சிராணியின் வீட்டிற்குச் சென்று அவருடன் பேசுவதற்காகச் சென்ற சரவணன், அன்று அப்பகுதியில் உள்ள சாலையில் உடலில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது.
 
இதனையடுத்து சரவணனிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் கூறியதாவது :
 
ஜான்சிராணி வீட்டிற்குச் சென்றபோது அவர் ஜூஸ் கொடுத்தார். அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்று தெரிவித்துள்ளார்.
 
அதன் பின்னர் போலீஸார்  கூறியதாவது :ஜான்சிராணிக்கும், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்துள்ளது.  அந்த இளைஞர் கொடுத்த யோசனையில்தான் ஜான்சிரானி, சரவணனுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
 
இதனையடுத்து சரணவன் மயங்கி விழுந்ததும் இருவரும் சரமாறியாக அடித்து சாலையில் அவரை வீசியுள்ளனர்.தற்போது ஜான்சிராணியை கைது செய்து கிருஷ்ணகிரி பெணகள் சிறையில் அடைத்துள்ளனர். ஃபேஸ்புக் நண்பரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :