தூய்மை இந்தியா திட்டத்தின் பேரில் மோசடி செய்த நபர் !
சேலம் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்ட அதிகாரி என்று கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
கன்னக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்தவர்களிடம் சென்ற ஒரு இளைஞர் ஒருவர், பிரதமர் மோடி அறிமுகம் செய்த தூய்மை இந்தியா திட்டத்தில் பல உதவிகள் பெற்றுத்தருவதாகச் தெரிவித்தான்.
பின்னர் இதை நம்பிய மக்கள் அவரை பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரியிடம் கூறினர்.
இதையடுத்து அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவரிடம் அடையாள அட்டையைக் காட்டும்படி கேட்டனர். ஆனால் அடையாள அட்டைகள் எதுவும் இல்லாததால் கன்னக்குறிச்சி போலீஸுக்கு புகார் தெரிவித்து அவரை போலீஸில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீஸார் அவரிடம் விசாரித்த போது, அவரது பெயர் பார்த்திபன், பழவந்தாங்களைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளான்.
மக்களை ஏமாற்றி மோசடி செய்துவந்த பார்த்திபனை போலீஸார் கைதுசெய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.