திங்கள், 2 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (19:06 IST)

மகளின் கண்முன்னே தாயை ஏற்றி கொன்ற லாரி:பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மகளின் கண்முன்னே தாயை ஏற்றி கொன்ற லாரி:பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
சேலம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை, டிப்பர் லாரி ஒன்று ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே தாரமங்கலத்தைச் செர்ந்தவர் கிறிஸ்டி அகல்யா ராணி. அவர் தனது 12 வயது மகள் கிரேவியுடன் தாரமங்கலம் ஆசிரியர் காலனியில் வசித்துவந்தார்.

கிறிஸ்டியின் கணவர்  திருநெல்வேலியில் அல்வா கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கிறிஸ்டி தனது மகள் கிரேவியை பள்ளியிலிருந்து அழைத்துகொண்டு, தாரமங்கலம் பிரதான சாலையில் நடந்துவந்துகொண்டிருந்தார்.
மகளின் கண்முன்னே தாயை ஏற்றி கொன்ற லாரி:பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

அப்போது அவருக்கு பின்னால் ஒரு டிப்பர் லாரி வேகமாக வந்து அவர் மேல் இடித்து தள்ளியதில், கீழே விழுந்தவர் மீது, அந்த லாரியின் சக்கரம் ஏறியது. பின்பு அந்த லாரி ஒரு வினாடி கூட வேகமாக கடந்து சென்றது.
மகளின் கண்முன்னே தாயை ஏற்றி கொன்ற லாரி:பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

இதனால் சம்பவ இடத்திலேயே கிரிஸ்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் சிசிடிவி காட்சியாக பல செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது.

இச்சம்பவம், தாரமங்கலம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.