1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sa chandrasekar4 talk about his son vijay

60 வருஷமா பேசி பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க... விஜய் செயல்படுறார்! – எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பதில்!

sac
தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் சந்திக்கும் எந்தவொரு முக்கியப் பிரச்சினை குறித்தும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவதில்லை என்றும், தனது கருத்துக்களைப் பகிர்வதில்லை என்றும் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு விஜயின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்  அதிரடியாகப் பதில் அளித்துள்ளார்.
 
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பேச மறுக்கிறார் என்ற விமர்சனத்தை முற்றிலுமாக மறுத்தார். இது குறித்து அவர் கூறியபோது,:
 
கடந்த 60 ஆண்டுகளாக இங்கு இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் பேசி பேசியே நாட்டை கெடுத்துவிட்டார்கள். வெறும் பேச்சை மட்டுமே கேட்டு மக்கள் பழகிவிட்டார்கள். இப்போது விஜயும் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. அரசியலில் பேசுவது முக்கியமல்ல, செயல்படுவதுதான் முக்கியம். விஜய் களத்தில் இறங்கி மக்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி செயல்படும் ஒருவர், அப்புறம் எதற்காக தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டும்?  என்று கூறியுள்ளார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அமோனியா வாசு கசிவு விபத்துக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம்: தேமுதிக குற்றச்சாட்டு