1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (15:01 IST)

RT-PCR பரிசோதனை கட்டணம் குறைப்பு - யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் அல்லாதவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
தமிழக அரசு குறைத்து வெளியிட்டுள்ள விலை பட்டியலின் விவரம் பின்வருமாறு... 
 
1. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
2. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
3. குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.