1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona test in private labs fees price down

தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு

Tamilnadu
தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டுமல்லாமல் தனியார் ஆய்வகங்கள் மூலமாகவும் மக்கள் கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கான கட்டணங்களை குறைத்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தனிநபர் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1200 லிருந்து ரூ.900 ஆக குறைக்கப்படுகிறது. முதல்வரின் காப்பீட்டு திட்ட பயணாளிகளுக்கு சோதனை கட்டணம் ரூ.800 லிருந்து ரூ.550 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் !