ஆந்திராவில் சினிமா ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ்… ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டணம் குறைப்பு!
ஆந்திராவில் இணையதளம் மூலமாக டிக்கெட் முன் பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது என்பது அதிக செலவு வைக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் டிக்கெட் விலைகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறைத்து அதைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் படி டிக்கெட் விலை 10 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை மட்டுமே இருக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சினிமா நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும் என சொல்லப்பட்டது.
இதுபோலவே இப்போது தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து ஆந்திராவில் இணையதளம் மூலமாக டிக்கெட் புக் செய்ய 30 ரூபாயாக இருந்த கட்டணத்தை 18 ரூபாயாக குறைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் 12 ரூபாய் வரை மிச்சம் பண்ண முடியும்.