செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (08:46 IST)

விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை; கட்டணம் குறைப்பு!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய விமானநிலைய இயக்ககம் கட்டணம் நிர்ணயித்திருந்தது.

தற்போது அந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு 700 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.600 ஆகவும், ரேபிட் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,400 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,900 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த குறைக்கப்பட்ட கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன.