வியாழன், 21 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 மார்ச் 2025 (12:34 IST)

தமிழகத்தின் ஒவ்வொரு பூத்திலும் தண்ணீர், மோர் பந்தல்கள்: அண்ணாமலை

Buttermilk
தமிழ்க மக்களுக்கு உறுதுணையாகக் களத்தில் நின்று அவர்கள் துயர் நுடைத்து, மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் முன்னின்று செயல்படுவது தமிழக பாஜக சகோதர சகோதரிகளின் இயல்பு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தின்போது, தாமாக முள்வந்து தண்ணீர்ப் பந்தல்களும், மோர்ப் பந்தல்களும் அமைத்து மக்களின் தாகம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது சகோதர, சகோத்ரிகள், இந்த ஆண்டும். கோடைக் காலம் தொடங்கி விட்டது. 
 
வெயிலின் கடுமை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழக பாஜக சகோதர சகோதரிகள், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் உள்தைப் பணியில் மீண்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம்
 
இது குறிப்பாகப் பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், சந்தைகள் எனப் பொதுமக்கள் அங்கம் கூடம் இடங்கள் அருகே தண்ணீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்களை அமைப்பது. அனைத்து மக்க்ளுக்கும் பயன்படும் வகையில் அமையும்
 
தமிழகத்தின் ஒவ்வொரு பூத் அளவிலும் நமது சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற அளவில் தண்ணீர பந்தல்கள், மோர்ப் பந்தல்கள் அமைத்திடுவதோடு கோடைக் காலம் முழுவதுமே அவற்றைப் பராமரித்துப், பொதுமக்களுக்குத் தொடர்ந்து பயன்படுமாறு செய்ய வேண்டும்.. என்று தமிழக பாஜக சகோதரிகள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran