அதிமுகவில் இணைகிறாரா தனுஷ்?.. எடப்பாடி பழனிச்சாமி போடும் கணக்கு!...
அதிமுகவில் தனுஷ் இணையப்போகிறார் என்கிற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தனுஷ் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் விழாவில் தனுஷ் பேசிய பேச்சுதான்.
நாம் இப்படியே இருக்கக்கூடாது.. அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.. மக்களுக்கு உதவி செய்யுங்கள் என அவர் பேசியிருந்தார். மேலும், தனது ரசிகர் மன்றங்களை அவர் தற்போது நற்பணி மன்றங்களாக மாற்றி எல்லா மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அனேகமாக 2028ம் வருடம் அவர் கட்சியை துவங்கி 2031 சட்டமன்ற தேர்தலை சந்திப்பார் என சொல்லப்படுகிறது.
ஒருபக்கம், அவரை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சிகளும் நடப்பதாக சொல்லப்படுகிறது. பழனிச்சாமியும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. பழனிச்சாமியின் மகன் மிதுனும், தனுஷும் சந்தித்து சில முறை இதுபற்றி ஆலோசனை நடத்தியதாகவும் ஒரு செய்தி உண்டு. அதிமுகவில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடந்து வருகிறதாம்.