1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RS Bharathi says bjp government only for six months

இன்னும் 6 மாதம்தான் மோடியின் ஆட்சி இருக்கும்: ஆர்.எஸ்.பாரதி

மோடி
இன்னும் ஆறு மாதம்தான் இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு இருக்கும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 
 
திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை என்றால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கும் என்று கூறிய அவர் ’பட்டை போட்டவன் எல்லாம் இந்து அல்ல உண்மையான இந்துக்கள் நாங்கள் தான் என்று கூறினார். 
 
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டது  என்றும் இன்னும் ஆறு மாதம்தான் மோடி ஆட்சி இருக்கும் என்றும் சேலத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
 
 இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று மோடி தலைமையிலான ஆட்சியின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது கட்டம்: குஜராத் முதல் மேகாலயா வரை தொடங்கும் ராகுல் காந்தி..!