திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (17:35 IST)

டாஸ்மாக்கில் மதுவிற்கு கூடுதல் விலை கேட்கும் ஊழியர்கள்...மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

karaikudi
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளள நகராட்சி காரைக்குடி. இங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுவிற்கு கூடுதல் விலைவைத்து ஊழியர்கள் விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, டாஸ்மாக்கில் மது வாங்க வருபவர்களிடம் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், காரைக்குடியில் உள்ள பாண்டியன் நகர் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபான பிரியர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் கேட்டுளனர். அப்போது மதுப்பிரியருக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர் அவரது 10 ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.