1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (19:50 IST)

'இந்தியா முழுவதும் என் வீடுதான்'- ராகுல் காந்தி எம்.பி.,

rahul gandhi
முன்பு குடியிருந்த அதே பங்களா கிடைக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  ராகுல் காந்தி, 'இந்தியா முழுவதும் என் வீடுதான்' என்று அவர் கூறினார். 

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு, குற்றவியல்  அவதூறு வழக்கில்    இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது குஜராத் உயர்நீதிமன்றம்.  இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில்  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை  நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் அதிரடியாக பல கேள்விகளையும் எழுப்பியது.

அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதை அடுத்து, தற்போது ராகுல் காந்தி  மீண்டும் எம்பி ஆகியுள்ளார்.

டெல்லியில் அவர் வசித்து வந்த அரசு பங்களா அவருக்கு மீண்டும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை செயலகம் இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த  நிலையில் முன்பு குடியிருந்த அதே பங்களா கிடைக்குமா என்று செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,  இந்தியா முழுவதும் என் வீடுதான் என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வரும் 12 ஆம் தேதி ராகுல் காந்தி மீண்டும் எம்பியான பின்னர்,  கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதிக்கு செல்லவுள்ளார்.