திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (13:07 IST)

அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு..!

அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை என ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் பொன்முடியை பார்ப்பதற்காக ஆர் எஸ் பாரதி சென்றதாகவும் ஆனால் அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இதை அடுத்து ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது
 
பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால், கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும். அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்,
 
Edited by Mahendran