வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (13:14 IST)

கடலுக்கு பதில் நினைவிடத்தில்.. இடமாற்றம் ஆகிறதா கருணாநிதி பேனா சிலை?

karunanidhi pen
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலின் நடுவே பேனா சிலை வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக கருணாநிதி நினைவிடத்திலேயே பேனா சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 
கடலின் நடுவே பேனா சிலை வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதை அடுத்து கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடம் அருகிலேயே பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
வங்கக்கடலில் பேனா சிலை வைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் அனுமதி கிடைத்தபோதிலும் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவே தமிழக அரசே இந்த முடிவை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.  
 
ஆனால் இது குறித்து அரசு தரப்பில் எந்த விதமான அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran