வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (21:40 IST)

நடிகர் விஜய், ' இரவு பாட சாலை' தொடங்குவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்- கே.எஸ். அழகிரி

சமீபத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரில் சந்தித்தபோது மாணவர்களுக்கு இலவச கல்வி பயிலகம் தொடங்க இருப்பதாக இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். அதன்படி,  நேற்று பத்திரிக்கைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுருந்தார்.

அதில், 

"தளபதி" அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விஜய் மக்கள்  மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்’’  என்று தெரிவித்திருந்தார்.

இத்திட்டத்திற்கு  காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பாராட்டியுள்ளார்.  விஜய்யின் பயிலம் கல்வித்திட்டத்திற்கு  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் டுவிட்டர் பக்கத்தில், கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் நடிகர் விஜய்,  இரவு பாட சாலை தொடங்குவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.