1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Robbery Gangleader was arrested in tanjavur

தனியாக இருக்கும் கல்லூரி காதலர்களை மிரட்டி அத்துமீறல் – கும்பலின் தலைவன் கைது !

தஞ்சை
தஞ்சாவூர்- திருச்சி பைபாஸ் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காதலர்களை மிரட்டி கொள்ளையடித்துக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்தவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் என்ற ஊரை ஒட்டி திருச்சி, தஞ்சாவூர் பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலைப்பகுதிகளில் ஆள்நடமாட்டம் குறைவானப் பகுதியில் காதலர்கள் தனிமையில் சந்தித்துப் பேசுவது நடந்துள்ளது. இதைக் கவனித்த ஒரு கும்பல் அவர்களை மிரட்டி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறிப்பதோடு பெண்களிடம் பாலியல் ரீதியாகவும் அத்துமீறியுள்ளனர். இது சம்மந்தமாகப் போலிஸாருக்குப் பல புகார்கள் வந்ததை அடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பகுதியில் போலிஸார் மப்டியில் கண்காணித்தபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றிக்கொண்டிருந்த ரமேஷ் என்பவரைக் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்களை சொல்லியுள்ளார். காதலர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் என்பதால் இதுபற்றி வெளியே தெரியாது என நினைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக சொல்லியுள்ளார். போலிஸ் இப்போது அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
கணவரை விவாகரத்து செய்த பெண் – மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட பெண் !