முருகனுடன் தொடர்பில் இருந்த நடிகை யார்?

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 15 அக்டோபர் 2019 (16:03 IST)
லலிதா ஜுவல்லரில் கொள்ளை வழக்கில் சரண்டரான முருகனுடன் தொடர்பில் இருந்த நடிகை யார் என போலீஸார் விசாரணை மேற்கொள்ள உள்ளனராம். 

 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், திரூவாரில் மணிகண்டன் என்பவர் 5 கிலோ நகையுடன் கைதானார்.  
 
அவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு முருகன்தான் தலைவன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், முருகன் பெங்களூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தார். 
 
முருகன் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் இருந்து சினிமா தயாரித்ததும், அதோடு நடிகையுடன் தொடர்பில் இருந்ததும் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. எனவே அந்த நடிகை யார் என போலீஸார் விசாரிக்க துவங்கியுள்ளனர். 
 
அதில், தமிழ் சினிமாவில் இளம் வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாம். இருப்பினும் இது உறுதியாகாத நிலையில், முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :