லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் பிடிபட்டதால் போலீஸார் நேர்த்திக்கடன் !

Last Modified புதன், 16 அக்டோபர் 2019 (13:52 IST)
திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடித்த கும்பல் சிக்கியதை அடுத்து போலிஸார் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி, திருச்சி சமயபுரம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 பவுன் தங்க நகைகளும், ரூ.19 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் போலிஸார் இரவு பகலாக தேடி வந்தனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இவ்விருக் கொள்ளையிலும் ஒரே மாதிரி முகமூடி அணிந்து திருடிய வீடியோக் காட்சிகள் சிக்கியதால் ஒரே கும்பல்தான் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சுரேஷ், மணிகண்டன் ஆகியோர் முதலில் சிக்க பின்னர் கூட்டத்தலைவன் திருவாரூர் முருகன் பெங்களூருவில் சரணடைந்துள்ளார். இதையடுத்து இரு வழக்குகளிலும் முக்கியத் திருப்பம் ஏற்பட்டதால் திருச்சி காவலர்கள் ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :