1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (22:37 IST)

காவிரிக்கரையில் புதைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகள்: லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதா?

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட்டு வரும் நிலையில் இன்று காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பெங்களூரில் இருந்து வந்த காவல்துறையினர் இந்த நகைகளை தோண்டி எடுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இம்மாதம் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார்களின் துரித நடவடிக்கையால் இந்த கொள்ளைஇயில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 
 
சரண் அடைந்த முருகனிடம் பெங்களூரு போலீசார் மற்றும் தமிழக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதி காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து கொள்ளையன் முருகன் கொடுத்த தகவலின் பேரில் சமீபத்தில் காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருசில நாட்கள் ஆகியிருந்தாலும் இதுகுறித்து வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது