வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (20:43 IST)

பணப்பட்டுவாடா தீவிரம்; ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து?

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தீவிரமாகி உள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசியல் கட்சியினருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆலோசனை நடத்தினார்.

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து இன்று சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா தலைமை செயலகத்தில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக சார்பில் ஜெயக்குமார், தம்பிதுரை திமுக மு.க.ஸ்டாலின்,  பாஜக சர்பில் தமிழிசை ஆகியோர் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ராவை சந்தித்தனர்.  
 
கடந்த ஒருவாரத்தில் மட்டும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர். அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக திமுக சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. பாஜக மாநில தலைவர் தமிழிசை பணம் பட்டுவாடா நடப்பதால் தேர்தலை நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில் எந்த நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.