திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (16:15 IST)

ஓவியாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரவ் இருக்கலாம். ஆனால் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களின் மனதில் நின்ற ஒரே ஒருவர் ஓவியாதான்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு புகழ் அதிகமானதை போலவே சினிமா வாய்ப்புகளும் அதிகமாகி தற்போது அவர் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் ஓவியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். வரும் 20ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஓவியா தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாட முடிவு செய்துள்ளார். #askoviyasweetz என்ற ஹேஷ்டேக்கில் ஓவியாவிடம் கேட்க விரும்பும் கேள்விகளை ரசிகர்கள் கேட்கலாம், அதற்கு ஓவியாவே பதிலளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியாவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது