திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (17:37 IST)

கேரளவில் வடகொரிய அதிபர் புகைப்படம்; சர்ச்சையை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேனர்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேனர் ஒன்றில் வடகொரியா அதிபரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நெதுகண்டம் என்ற பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தொண்டர்கள் செய்த இந்த காரியம் கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரை உடனடியாக நீக்க கூறியுள்ளதாக கட்சியின் மாவட்ட தலைமை தெரிவித்துள்ளது.
 
அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. பேச்சுவார்த்தைக்கு முன்வந்த அமெரிக்காவிடம் பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை என வடகொரியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்நிலையில் கேரளாவில் வடகொரியா அதிபர் புகைப்படம் இடம்பெற்ற பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.