புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (19:25 IST)

துபாய் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த பி.வி.சிந்து

கடந்த சில நாட்களாக துபாயில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டி சற்றுமுன்னர் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி தோல்வி அடைந்தார்

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை அகேனே யமாக்குச்சியும் மோதினர். இருவருமே ஆக்ரோஷமான சாம்பியன் பட்டத்திற்காக போராடிய நிலையில் 21-15 என்ற புள்ளிக்கணக்கில்  பி.வி.சிந்து முதல் செட்டை கைப்பற்றினார். இதனால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருந்ததாக கணிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த செட்டில் மாயாஜால வித்தை காண்பித்த அகேனே 12-21 என்ற விகிதத்தில் எளிதில் செட்டை கைப்பற்றினார். இதனையடுத்து மூன்றாவது செட்டையும் கைப்பற்றுவதில் இருவரும் தங்கள் முழு பலத்தையும் காண்பித்த நிலையில் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் அகேனே செட்டை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிவரை கடுமையாக போராடிய பி.வி.சிந்து சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் கோப்பையை பறிகொடுத்தார்