நடிகர் சிவகார்த்திகேயன், யோகிபாபுவுக்கு கலைமாமணி விருதை வழங்கினார் முதல்வர் !
தமிழக அரசின் கலைமாமணி விருது நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 154 பேருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமனி விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
அதன்படி 2019 -2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறவுள்ள நடிகர், நடிகைகள், கலைஞர்களின் பெயர்ப்பட்டியலை சமீபத்தில்தமிழக அரசு அறிவித்தது.
இன்று தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவருகிறது.
இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், யோகிபாபு,ஐஸ்வர்யா ராஜேஷ்,. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்ட 134 பேருக்கு முதல்வர் பழனிசாமி கலைமாமணி விருதை வழங்கினார்.