சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

edappadi
சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடு
siva| Last Updated: திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:40 IST)
தமிழகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்
தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் வரவிருப்பதால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆச்சர்யமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே விவசாயிகளின் பயிர்க் கடன்கள் ரத்து, வழக்குகள் ரத்து உள்பட பல அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் தற்போது சொந்த வீடு அனைவருக்கும் கட்டித்தரப்படும் என்ற உறுதிமொழியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்
இன்று அவர் தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய போது ’சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி இலவசமாக காங்கிரட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சொந்த வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை கொண்டு வர வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :