காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டம்! – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

edapadi palanisamy
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:51 IST)
காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருந்த முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு காலத்தில் காவிரி ஆற்று நீரை குண்டாறில் திருப்பி விடவும், இதன் மூலம் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதுடன் குண்டாறு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை பெருக்கவும் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக பணிகளை தொடங்க இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.இதில் மேலும் படிக்கவும் :