தொடர்புடைய செய்திகள்
- திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபம்: மோடி திறந்து வைக்கிறார்!
- பழங்களை நடுரோட்டில் கொட்டிய பெண்..வைரலாகும் வீடியோ
- லதாமங்கேஷ்கரின் உடல் நிலையைக் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்தர் மோடி .
- பொங்கலுக்கு சிறப்பு பேருந்துசேவை அறிவிப்பு !
- தென்கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கொரோனாவை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள்!
டாஸ்மாக் கடைகளில் நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மதுக்கடைகள் திறந்து இருப்பதால் மது பிரியர்கள் மதுவாங்க முண்டியடிப்பதால் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக முழு ஊரடங்கிற்கு முந்தைய நாளில் பல மதுப்ரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் நிலையான இயக்க நடைமுறைகள் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது.
2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு பேல் கடையில் அனுமதிக்கக் கூடாது.
4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கமனம் அணிந்திருக்க வேண்டும்.
5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.
இதை தவிர பல்வேறு கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
