1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reservation to third gender says court

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடுள் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

மூன்றாம் பாலினம்
மூன்றாம் பாலினத்தவர்கள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 
 
அரசு பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவித இட ஒதுக்கீடும் இதுவரை வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு வயது வரம்பு சலுகை யுடன் மேலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பெண்கள் என அடையாளப்படுத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும் இட ஒதுக்கிட்டை   வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார் 
 
மேலும் எதிர்காலத்தில் அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமில்லாமல் மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார் 
அடுத்த கட்டுரையில்
உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டில் படிக்கலாம்: போலந்து அறிவிப்பு