1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Request to reopen schools in Tamil Nadu

ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு?

கொரோனா குறைவு
கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறலாம் என அரசு அறிவித்துள்ளது. 
 
முன்னதாக பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி, தேவை, மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்… புதிய ரேஷன் அட்டைகள் விண்னப்பம் அதிகரிப்பு!