திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (08:59 IST)

ரேஷன் நேரம் மாற்றம்: இன்று முதல் 3 நாட்களுக்கு...!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதற்கான நேரத்தில் இன்று முதல் மாற்றம். 

 
தமிழகத்தில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோக நேரத்தில் மாற்றம் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகள் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். 
 
இது உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகை நவம்பர் மாத தொடக்கத்திலேயே வருவதால் ரேஷன் பொருட்களும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதற்கிணங்க ரேஷன் கடைகள் நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி செய்லபடும்.
 
மேலும் நாள் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குவதால் ரேஷன் அட்டைதாரர்கள் தடையின்றி பொருட்களை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.