1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kaniyakumar under red alert of heavy rain

குமரியை குலுக்கு பருவ மழை; வீடுகள் இடிந்தன! – ரெட் அலர்ட் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன்னியாக்குமரியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாக்குமரியில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாமிரபரணி, குழித்துறை, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று வரை ஆரஞ்ச் அலர்ட் கன்னியாக்குமரிக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸ்: தொங்கா தீவில் முதல் கொரோனா தொற்று - அந்நாட்டு அதிகாரிகள் கூறுவதென்ன?