கூட்டணி தர்மம் கைய கட்டிபோட்டுருச்சோ மிஸ்டர் ராமதாஸ்..?
கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறி விடும் என்றே கணிக்கப்பட்டது.
அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழகர்கள் இஸ்லாமியர்கள் இணைக்கப்படாததாலும், மத நல்லினத்திற்கு எதிரானது என தமிழகத்தில் இதர்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக திமுகவினர் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பாமகவும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், இலங்கை தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு பாமக ஆதரவு அளித்தது குறித்து கேள்வி பாமக தலைவர் ராமதாஸிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், கூட்டணி தர்மத்திற்காகவே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தோம். கூட்டணி என்றால் ஆதரித்து தான் ஆக வேண்டும் என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.