திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (15:44 IST)

அதிமுகவுக்கு கருணாஸ் ஆதரவு!

உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.   
 
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. இந்நிலையில் தற்போது கருணாஸ் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். 
 
ஆம், முதல்வர் பழனிச்சாமியை நேரில் சென்று சந்தித்து கருணாஸ் எம்எல்ஏ அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாவது, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை பிரச்சாரம் செய்யும் என்றும் தெரிவித்தார்.