சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை ஒரு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் சனிக்கிழமையான நாளை இயங்கும். மழை விடுமுறையால் பாதிக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைந்து முடிக்கவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் செயல்படும் என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதற்கேற்ப தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Edited by Mahendran