வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (09:46 IST)

”பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்”.. மத்திய அரசு விளக்கம்

புதிய பாஸ்போர்டுகளில் தாமரை சின்னம் ஏன் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன், கேரள மாநிலத்தில் விநியோகிக்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பாஜகவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ”போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான அம்சங்களின் ஒன்றாக இந்த தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தாமரை தேசிய மலர். இது போல் தேசிய விலங்கு, தேசிய பறவை ஆகியவை சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் “ என அறிவித்துள்ளது.