திங்கள், 9 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் 'தொங்கு சட்டமன்றம்' அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் அடித்து கூறுகின்றனர். 
 
ஐம்பது ஆண்டுகாலத் திராவிட கட்சி அரசியலில், வழக்கமாக திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டில் ஒன்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். ஆனால், இந்த முறை நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' மற்றும் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' ஆகிய மாற்று சக்திகளின் எழுச்சி, வாக்குகளை கணிசமாக பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் அரசியல் ஆய்வுகளின்படி, ஆளும் திமுகவிற்கு எதிர்ப்பு ஓட்டுகள் அதிகரிப்பதும், அதிமுக தனது வாக்கு வங்கியை முழுமையாக மீட்டெடுக்க திணறுவதும் விஜய்க்கு சாதகமாக மாறக்கூடும். விஜய் சுமார் 20% முதல் 30% வரையிலான வாக்குகளைப் பெற்றால், அது பிரதானக் கட்சிகளின் வெற்றியை நேரடியாக பாதிக்கும். 
 
இதனால், எந்தவொரு கூட்டணியும் ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை எட்டுவது கடினமாகிவிடும். இத்தகைய சூழலில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகளே  ஆட்சியை தீர்மானிக்கும் என்றும், இது தமிழகத்தில் ஒரு 'கூட்டணி ஆட்சி' காலத்திற்கு வித்திடும் என்றும் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
 
Edited by Siva