செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (11:05 IST)

முதல்வராக எனக்கு ஆசை இல்லை!? – பரபரப்பை கிளப்பும் ரஜினி!

நேற்று மாவட்ட நிர்வாகிகளுடம் பேசிய ரஜினிகாந்த் தான் முதல்வர் பதவியை ஏற்க போவதில்லை என பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தான் விரைவில் கட்சி தொடங்க போவதாக சில வருடங்களுக்கு முன்பே அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்தப்படியே அரசியல் நுழைவுக்கான பணிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ராகேவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அதை தொடர்ந்து பேசிய அவர் சில விஷயங்களில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறினார். ஆனால் அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுவதாக கூறினார்.

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை ரஜினிகாந்த அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக கட்சி ஆரம்பித்து தான் வெற்றி பெற்றாலும் தான் முதல்வர் பதவியை ஏற்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியிலிருந்து தகுதியான நபர் ஒருவர் முதல்வர் பதவியை வகிப்பார் என கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் தான் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.