அர்ஜூன் சம்பத் மீது போலீஸில் புகார்..
பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டுவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டும் வகையில், அர்ஜூன் சம்பத் செயல்படுவதாக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
அதில், “சில நாட்களுக்கு முன்பு அர்ஜூன் சம்பத், மைலாப்பூர் சாந்தோம் சர்ச் பாதிரியாரை மிரட்டி, இந்த இடத்தில் கபாலீஸ்வரர் கோவில் உள்ளது என்று மிரட்டியுள்ளார். அமைதி பூங்காவான தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பி கலவரத்தை தூண்டும் அர்ஜூன் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.