1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajini talks Kamalhasan is an angry man

கமலிடம் நான் எச்சரிக்கையாக இருப்பேன் - ரஜினிகாந்த் பேச்சு

Rajini
நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன்(82), மாரடைப்பு காரணமாக சமீபத்தில் காலமானார். 


 

 
நடிகர் கமல்ஹாசன், சாருஹாசன் ஆகியோருக்கு மூத்தவர் சந்திரஹாசன். அவரின் மகள் அனுஹாசன். இவர் இந்திரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 
 
அந்நிலையில், லண்டனில் உள்ள அனுஹாசன் விட்டில் இருந்த போது திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரின் உயிர் பிரிந்தது. இந்நிலையில், அவரின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. 
 
அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசிய போது “ கமல்ஹாசனை, சந்திரஹாசன் வழி நடத்தி வந்தார். பாலசந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர் கமலின் உயிர் போன்றவர்கள். அவர்களில் மூன்று பேர் தற்போது இல்லை. ஆனால், அவர்களின் ஆன்மா கமலை வழிநடத்தும். 
 
கமல்ஹாசன் போல் கோபக்காரரை நான் பார்த்தது இல்லை. எனவே, அவரிடம் நான் எச்சரிக்கையாக இருப்பேன். தற்போதுள்ள நடிகர்கள் போல் கமல் சொத்து சேர்த்து வைக்க வில்லை” என ரஜினி பேசினார்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
எச்.ராஜாவை நார் நாராக கிழிக்கும் அய்யாக்கண்ணு! (வீடியோ இணைப்பு)