செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:59 IST)

ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு : விஜய் குறித்து தெரியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை, பள்ளிக்கரணையில், நேற்று, அதிமுக கட்சியினர் சார்பில் ,சாலையில் வைத்திருந்த பேனர் ஒன்று விழுந்ததால் இளம்பெண் சுபஸ்ரீ, சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் இனிமேல் பேனர் கலாச்சாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அதிமுக நிர்வாகியின் இல்லப் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சென்னை, பள்ளிக்கரணையில் பேனர், விழுந்ததால் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணம் வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

மேலும், நடிகர்கள், ரஜினி மற்றும் அஜித் ஆகியோர் அரசியல் கட்சி துவக்கினால் ஆதரவளிப்போம். ஆனால், நடிகர் விஜய் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

ஏற்கனவே,கடந்த வருடம் ,விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான சர்கார் படம் அதிமுக அரசினை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகப் பல்வேறு விமர்சங்கள் எழுந்தது  குறிப்பிடத்தக்கது.