செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (14:10 IST)

நக்கலாய் பேசிய உதயநிதி தோஸ்து... மொக்க பண்ணிய அதிமுக அமைச்சர்!

உதயநிதி ஸ்டாலினின் நண்பர் அன்பில் மகேஷ் அதிமுக அமைச்சருக்கு திமுகவில் இணைய அழைப்பு விடுத்ததற்கு பதிலடி கிடைத்துள்ளது. 
 
திமுக இளைஞர் அணியை சேர்ந்தோர் குளங்களை தூர்வாரும் பணிகளை செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் நெடுங்கூர் கிராமத்தில் உள்ள குளத்தை இவர்கள் தூர்வாரும் முன்னர் அப்பணியை கரூர் மாவட்ட நிர்வாகமே துவங்கிவிட்டது. 
 
இருப்பினும் திமுகவினர் குளத்தின் மறுபக்கத்தில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகிகளுக்கு உதவினர். இந்த பணியின் போது செந்தில் பாலாஜியும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் கலந்துக்கொண்டனர். 
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ் பின்வருமாறு பேசினார், தூர்வாரும் பணிகளை நாங்கள் துவங்கி இருந்தாலும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதை முன்னெடுத்தது வரவேற்கதக்கதுதான். 
 
வருகிற 14 ஆம் தேதி திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வந்து சேர்ந்துக்கொள்ளட்டும் என அழைப்புவிடுத்தார். 
இதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அன்பில் மகேஷ் என்னை திமுகவில் வந்து சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார். திமுகவில் சேர வயது முக்கியமில்லை ஏனென்றால் 70 வயது வரை திமுகவில் இளைஞரணியில் இருக்கலாம்.
 
ஆனால் என் உயிர் உள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன். திமுகவில் இணையுமாறு அழைத்த அன்பில் மகேஷுக்கு இதுதான் என் பதில் என தெரிவித்து நாசூக்காக அன்பில் மகேஷின் முக்குடைத்துள்ளார். 
அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். அன்பில் மகேஷ் குடும்பம் திமுக குடும்பத்தின் நட்பு வாழையடி வாழையாக தொடரும் ஒரு உறவாக உள்ளது.  
 
மறைந்த கருணாநிதியின் முக்கியமான நண்பர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம். இவரது மகன் அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர். அன்பில் பொய்யாமொழி மகனான அன்பில் மகேஷ் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.