இதுவரைக்கும் பார்க்காத விஜய்ய பார்ப்பீங்க, நான் கேரண்டி: லோகேஷ் கனகராஜ்

Last Modified வியாழன், 12 செப்டம்பர் 2019 (08:57 IST)
தளபதி விஜய் நடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் ’விஜய் 64’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் பிஸியாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படம் குறித்து ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்


அதில் ’விஜய் 64’ படத்தை பற்றி இப்பொழுது நான் பேசுவது ரொம்ப சீக்கிரம் என்று நினைக்கின்றேன். இந்த படத்தை பற்றியோ அல்லது இது எந்த மாதிரியான படம் என்பது பற்றியோ இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். விஜய் ரசிகர்கள் இதுவரை பார்க்காத விஜய்யை இந்த படத்தில் பார்ப்பார்கள். அதேபோல் இதுவரை பார்க்காத விஜய் படமாகவும் இந்த படம் இருக்கும். அதுக்கு நான் கேரண்டி என்று உறுதிபடக் கூறியுள்ளார்


லோகேஷ் கனகராஜின் இந்த பேட்டியை அடுத்து விஜய் இந்த படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதே போல் வெறும் ஆக்ஷன் மட்டுமின்றி வித்தியாசமான ஒரு களமாகவும் இந்த படம் விஜய்க்கு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப்படம் விஜய்யின் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று படக்குழுவினர் இப்போதே கூறி வருவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :